பல்லடத்தில் நகராட்சியை கண்டித்து கடை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தினசரி மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் என். ஜி.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் சில்லறை வியாபார வணிக வர்த்தகங்கள் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், பல்லடம் நகராட்சியில் ஊழல் முறைகேடு நடைபெறுவதாகவும் வியாபாரிகளின் வாடகை தொகைகளுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காமல் ஒரு மாதம் கட்டவில்லை என்றால் கடையை சாத்த வருவதாகவும் அதனை தொடர்ந்து வாடகைகளை உயர்த்தி உள்ளதாகவும் தொடர்ந்து வணிக வளாக வியாபாரிகளுக்கே கடையை திரும்ப வழங்காமல் புது புது நபர்களுக்கு வழங்குவதாகவும் மேலும் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகைகளை திரும்ப வழங்காமல் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும்,மேலும் எம்ஜிஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைத்து இப்பகுதியை சேர்ந்த பல்லடம் நகர தினசரி மார்க்கெட் மற்றும் என். ஜி.ஆர் ரோடு பேருந்து நிலைய வணிகர்கள் ஒருங்கிணைந்து தற்போது 500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் பல்லடத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது,
Next Story

