அரசு பள்ளி மாணவனை பாராட்டிய குமரி கலெக்டர் 

  அரசு பள்ளி மாணவனை பாராட்டிய குமரி கலெக்டர் 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் குளச்சல் அருகே அம்மாண்டி விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து, தமிழ்நாடு அரசு நான் முதல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, தேசிய முதன்மை கல்வி நிறுவனமான போபால் ஐஐஐடி யில் படிக்க ஆகாஷ் என்ற மாணவருக்கு இடம் கிடைத்தது. ஆகாஷ்  நேற்று குமரி கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த மாணவன் அரசு பள்ளியில் படித்து அரசு அளிக்கப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக தேசிய முன்னணி நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம் கிடைக்கப்பட்டுள்ளது. மாணவனை கலெக்டர் அழகுமீனா, அம்மாண்டிவிளை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட உயர் கல்வி ஒருங்கிணைப்பாளர் உட்பட பலர் வாழ்த்தினர்.
Next Story