கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு – கோவை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் !

X
கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் தனியார் நிறுவனம் முட்டைகோழி பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம், ஈக்கள், கொசு தொல்லை, நீர் பிரச்சினை மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்படும் எனக் கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கான அனுமதி ரத்து செய்ய வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், 50-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட அதிகாரிகளை சந்திக்க காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
Next Story

