ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சாலை கடந்த இரண்டு புலிகள் – வைரல் வீடியோ !

X
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சாலையைக் கடந்து சென்ற இரண்டு புலிகளின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆறு வனச்சரங்களை கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உலாந்தி வனச்சரகின் டாப்சிலிப் பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள், காட்டு மாடுகள், கருநாகம் உள்ளிட்ட அரிய பாம்பினங்கள், பல்வேறு தாவரங்கள் ஆகியவை அதிக அளவில் வாழ்கின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், வனத்துறையினர் கட்டுப்பாட்டில் சுற்றுலா நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த பகுதியில் வந்து வனவிலங்குகளை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், கோழி கமுத்தி செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் இரண்டு புலிகள் சாலையை கடந்து சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story

