விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவவா அதியன் கூட்டரங்கில் வருகின்ற 27.08.2025 அன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுடன கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இஆ அவர்கள் தகைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது களிமண்ணால் சிலைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும் எனவும் சிலைகளுக்கு இரசாயன வர்ணம் (பெயிண்ட்) தடைசெய்யப்பட்ட இரசாயன பொருட்களை சிலைகளுக்குப் பயன்படுத்த கூடாது எனவும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்கலை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகள் படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்குரலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் அல்லது சிலைகள்/பந்தல்களை பயன்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஸ் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது) கவிதா வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story




