கோவை: சொகுசு கார் திருட்டு : போலி டிரைவர் கைது

X
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அருள்மொழி சோழன் (42) தனது சொகுசு காரில் கேரளா செல்லும் வழியில் கருமத்தம்பட்டி அருகே மதுக்கூடத்தில் மது அருந்தினார். அப்போது தன்னை ஆக்டிங் டிரைவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட சியாஸ் (32, வாகராயம்பாளையம்) அவருடன் பழகி லாட்ஜில் தங்கினார். பின்னர் இருவரும் உணவகத்திற்குச் சென்றபோது சோழன் உள்ளே சென்று சாப்பிட, சியாஸ் காருடன் மாயமானார். சோழனின் புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, சியாஸ் சத்தியமங்கலம் பண்ணாரி பகுதியில் இருப்பதை கண்டறிந்து நேற்று கைது செய்தனர். போலீசார் காரை பறிமுதல் செய்து, சியாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

