சூலூரில் மர்மமான முறையில் பெண் மரணம் !

X
கோவை மாவட்டம் சூலூரில், மதியழகன் நகர் பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சுக்காத்தாள் (வயது 45), பணியிலிருந்து வீடு திரும்பியதும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடலில் எந்தவித வெளிப்புற காயமும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக மரணம் என போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து, சுக்காத்தாளின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

