கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி எம்எல்ஏ
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஆத்துக்கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெத்தலையாத்து ஸ்ரீ சூரமுள் குள்ள முனியப்பன் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது இன்று வியாழக்கிழமை காலை 9மணிக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது மேலும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
Next Story






