பேரறிஞர் அண்ணாவின் படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி
பேரறிஞர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story