கரூர்-அன்புக்கரங்கள் திட்டம் காணொளி காட்சியில் துவக்கி வைத்த முதலமைச்சர்.
கரூர்-அன்புக்கரங்கள் திட்டம் காணொளி காட்சியில் துவக்கி வைத்த முதலமைச்சர். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகைக் கான ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
Next Story






