மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

X
காடல்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், காடல்குடி அருகிலுள்ள கே.துரைசாமிபுரம் கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் திருத்கனி மனைவி சண்முக லட்சுமி (47) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கணி இறந்துவிட்டார். அதன் பின்பு சண்முகலட்சுமி கூலி வேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் ஈரக் கையுடன் பிளக் போர்டில் வயரை சொருகும்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகலாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காடல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

