ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அதியன் கூட்டரங்கில் இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோரிக்கைகளாக 448 மனுக்கள் அளித்தனர். தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார் இந்த நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
Next Story





