கத்தியால் குத்தி பணம் பறித்த இளைஞர் கைது!

கத்தியால் குத்தி பணம் பறித்த இளைஞர் கைது!
X
எட்டயபுரத்தில் பெண் போலீஸாரின் கணவரை கத்தியால் குத்தி பணம் பறித்த இளைஞர் கைது – மேலும் 5 பேரை போலீசார் வலைவீசினர்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஜேசுராஜ் (47), பெண் போலீஸ் தமிழ்ச்செல்வியின் கணவர். அவர் தனியார் தொழிற்சாலை அருகே நடந்துசென்றபோது, 6 பேர் கத்தி, அரிவாளுடன் தாக்கி ₹2,300-ஐ ஜி-பே மூலம் பறித்தனர். மொபைலை உடைத்து, மிரட்டி தப்பினர். காயமடைந்த ஜேசுராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 17 வயது ஐ.டி.ஐ. மாணவனை கைது செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருடன் இருந்த மற்ற 5 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story