காரிமங்கலத்தில் தேங்காய் விற்பனை ஜோர்

காரிமங்கலம் வார சந்தையில் 14 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் திங்கள்தோறும் தேங்காய் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுகிறது நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் அளவிலான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது தேங்காய் அளவைப் பொறுத்து ரூ.16 - ரூ.23 வரை விற்பனையானது மேலும் நேற்று 14 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், வழக்கத்தை விட நேற்று விற்பனை அதிகரித்து காணப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story