செம்மண் கடத்திய லாரி பறிமுதல், ஓட்டுநர் தப்பி ஓட்டம்

X
தர்மபுரி மாவட்டம் பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல்-நல்லம்பள்ளி நல்லம்பள்ளி சாலை வழியாக சட்டவிரோதமாக செம்மண் கடத்துவதாக கிடைத்த தகவலின் படி இன்று செவ்வாய்க்கிழமை உதவி புவியியலாளர் புவனாமாணிக்கம், வருவாய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகர்கூடல் - நல்லம்பள்ளி சாலையில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஓட்டுநர் தப்பியோடி விட்டார். சோதனையில் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து 3 யூனிட் செம்மண் கடத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story

