தூத்துக்குடியில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

X
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (17.09.2025) புதன்கிழமை, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் நாளைய கூட்டத்தில், காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் மற்றும் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Next Story

