வல்லநாடு துப்பாக்கி சுடும் போட்டி – சந்தோஷ் ஹடிமணி முதலிடம்

வல்லநாடு துப்பாக்கி சுடும் போட்டி – சந்தோஷ் ஹடிமணி முதலிடம்
X
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி – முதலிடம் திரு. சந்தோஷ் ஹடிமணி
தூத்துக்குடி, செப்டம்பர் 16: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., அவர்களின் முன்னிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பொறுப்பு திரு. சந்தோஷ் ஹடிமணி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடத்தினர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9, 11, 12வது பட்டாலியன்களைச் சேர்ந்த மொத்தம் 26 காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பிஸ்டல்/ரிவால்வர் பிரிவில் திரு. முருகன் (கூடுதல் கண்காணிப்பாளர், சைபர் குற்றப்பிரிவு, திருநெல்வேலி) முதலிடம், திரு. சந்தோஷ் ஹடிமணி இரண்டாம் இடம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் மூன்றாம் இடம் பெற்றனர். இன்சாஸ் ரக துப்பாக்கி பிரிவில், திரு. சந்தோஷ் ஹடிமணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் திருமதி. ரேகா R. நங்லாட் ஆகியோர் முதலிடம் பெற்றனர். திரு. சுரேஷ் (பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர்) மற்றும் திரு. இளஞ்செழியன் (கன்னியாகுமரி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்) இரண்டாம் இடம், திரு. ஆல்பர்ட் ஜான் மூன்றாம் இடம் பெற்றனர். ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில், திரு. சந்தோஷ் ஹடிமணி முதலிடம், திரு. முருகன் இரண்டாம் இடம், திரு. ஆல்பர்ட் ஜான் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை திரு. சந்தோஷ் ஹடிமணி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர். கமாண்டோ படை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் உடனிருந்தார்.
Next Story