பிஜேபிமாநில தலைவர் மகன் கல்குவாரி கருத்துகேப்பு கூட்டத்தில் வாக்குவாதம்!

பிஜேபிமாநில தலைவர் மகன் கல்குவாரி கருத்துகேப்பு கூட்டத்தில் வாக்குவாதம்!
X
பிஜேபிமாநில தலைவர் மகன் கல்குவாரி கருத்துகேப்பு கூட்டத்தில் வாக்குவாதம்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல்வேறு கல் குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து கனரக வாகனங்களை கொண்டு செல்லப்படும் குண்டு கற்கள் விதிமுறைகளை மீறி அதிக பாரத்தோடு கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீ மூலக்கரை கிராமத்துக்கு உட்பட்ட சர்வே எண்கள் 213 (P) மற்றும் 214 (P), 2.99.0 ஆக்டர் பரப்பளவில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைக்க பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளருமான ஸ்ரீ நயினார் பாலாஜி கடந்த 2021 ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். துறை சார்ந்த ஆய்வு பணிகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குவாரி ஆரம்பித்த பிறகு அதற்கான திட்ட காலம் ஐந்து ஆண்டுகள் குவாரி செயல்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நயினார் பாலாஜி ஸ்ரீ மூலக்கரை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க உள்ள கல்குவாரி தொடர்பாக இன்று பேட்மாநகரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கோட்டாட்சியர் பிரபு தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் குவாரிக்கு ஆதரவாக பேசும் நபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதால் கோரியை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். கோரிக்கை எதிர்ப்பு தெரிவித்து பேசும் நபர்கள், ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளால் தாங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு முற்றிலுமாக வேளாண்மை அழிந்து உள்ளது. வீடுகளில் விரிசல் விழுந்து வருவதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசுகையில், மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி புதிய குவாரி அனுமதி கேட்டுள்ள ஸ்ரீ மூலக்கரை பகுதியில் வண்டிப்பாதை உள்ளதாகவும் நீரோடைகள் உள்ள பகுதி என்பதாலும் சிவகளை தொல்லியல் களம் அருகில் இருப்பதாலும் புதிய கோரிக்கை அனுமதிக்க கூடாது என்றார். தொடர்ந்து அவர் பேச முயற்சித்த போது குவாரி ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து மைக்கை பறித்து அவரைப் பேசவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரையும் அமைதி படுத்திய கோட்டாட்சியர் பிரபு அனைவரும் பேசுவதற்கு உரிய அவகாசம் வழங்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து போலீசாரின் பலத்த பாதுகாப்போடு தொடர்ந்து கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. புதிய குவாரி அமைக்க இருப்பது குறித்து நைனார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்தியாளர்களிடம் பதிலளிக்க மறுத்தார்.
Next Story