தர்மபுரியில் விடியற்காலையில் கொட்டி தீர்த்த மழை
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவியது இந்த நிலையில் இன்று புதன்கிழமை விடியற்காலை முதல் தர்மபுரி, அரூர், பாளையம் புதூர், தொப்பூர்,மாம்பட்டி, வேப்பம்பட்டி, நல்லம்பள்ளி, கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிந்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story





