ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் நவோதயா பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை வெற்றி.

X
NAMAKKAL KING 24X7 B |17 Sept 2025 8:03 PM ISTநாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கடந்த 13.09.2025 சனிக்கிழமை கொங்கு சகோதயா கூட்டமைப்பு சார்பாக சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
அதில் நவோதயா பள்ளி மாணவ, மாணவியர்கள் அபார வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, கள்ளக்குறிச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர் அதில் நவோதயா பள்ளியில் பயிலும். 19வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முகமதுரயான் (மூன்று பதங்கங்களையும்,) வருண் (இரண்டு பதக்கங்களையும்,) மாணவி தீபிகா இரண்டாவது பரிசும், பிளன்சி ஐசினா (இரண்டாவது பரிசும்); பெற்றுள்ளனர். 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி பிரதிபா (சில்வர் மெடல்,) மாணவி (மிருத்திகா) கோல்டுமெடல், மாணவர் வருண்ஷர்சந்த் சில்வார்மெடல் பெற்று அபார சாதனைப் படைத்துள்ளனர்.பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி சான்றிதழ் மற்றும் மெடல்களை அணிவித்து வாழ்த்துகூறினார். அவர்பேசுகையில் “மேலைநாடுகளில் தோன்றிய இந்த விiயாட்டை ஆர்வமோடு கற்றுக்கொள்ளும் குழந்தைகள். ஆரோக்கியமாகவும். நல்ல உடல்நலத்துடனும், அறிவு வளத்துடனும் இருப்பார்கள் எனவே அனைவரும் இந்த விளையாட்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.” பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியர்கள், சகமாணவ, மாணவியர்கள் அனைவரும் பரிசு பெற்ற குழந்தைகளை வெகுவாக வாழ்த்திப் பாராட்டினார்கள்.
Next Story
