தென்திருப்பேரை பலத்த மழை – விவசாயிகள் பாதிப்பு

X
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று மாலை பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகள், தெருக்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் சாரல் மழையும் நீடித்தது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகள் கடும் இழப்பினை சந்தித்துள்ளனர். அதேபோல், குரும்பூர், நாசரேத், ஏரல் உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது.
Next Story

