வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம்.

X
NAMAKKAL KING 24X7 B |18 Sept 2025 8:19 PM ISTநாமக்கல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி விரைந்து முடிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுரை.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற மாபெரும் திட்டத்தினை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 24 நகர்ப்புற மற்றும் 15 ஊரகப் பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், உங்களின் வீட்டிற்கே வந்து, கேட்டறிந்து தீர்வு காணும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மொத்தம் - 238 முகாம்கள் (நகர்ப்புறம் – 110, கிராமப்புறம் -118) நடத்திட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 102 முகாம்களும் (நகர்ப்புறம் -44, கிராமப்புறம் -58), 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை 76 முகாம்களும் (நகர்ப்புறம் -36, கிராமப்புறம் -40) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 10 வரை 60 முகாம்கள் (நகர்ப்புறம்-30, கிராமப்புறம் -30) நடத்திட திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 55,517 மகளிர் பதிவு செய்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும். துறை அலுவலர்கள் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி பணிகளை முடித்திட வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து ஏதேனும் தொய்வு இருப்பின் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து திட்டங்களையும் நன்கு ஆராய்ந்து பயனாளிகளுக்கு முறையாக சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், தெரிவித்தார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமின் அடிப்படை தரவு, முகாமின் தற்போதைய நிலை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் குறித்த தகவல் கையேடு மற்றும் விண்ணப்பம் விநியோகம், மனுக்களின் நிலை மற்றும் முகாமின் செயல்பாடுகள், பட்டியலிடப்பட்ட வகை, பட்டியலிடப்படாத வகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கள சரிபார்ப்பு ஆகியவை குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து,, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் மு.ஆசியா மரியம், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், நகர்ப்புற குடியிருப்பு ஆக்கிரமிப்பு முறைப்படுத்தல், வீட்டுமனை பட்டா, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, நாமக்கல் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி விரைந்து முடித்திட துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .சு.வடிவேல், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கீத் குமார் ஜெயின், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், உட்பட வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
