பாப்பாரப்பட்டியில் கால்நடைகள் விற்பனை ஜோர்

பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் 43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி பாப்பாரப்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறுகிறது நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கறவை மாடுகள், கன்றுகள், வளர்ப்பு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கறவை மாடுகள் ரூ.6,000 - ரூ.75,000 வரையிலும், 18 லட்சத்திற்கும், ஆடுகள் ரூ.3000 - 18,000 வரையிலும் என 25 லட்சத்திற்கும் என43 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story