தலைமை ஆசிரியை ஆபாச பேச்சு... மாணவிகள் மறியல்

தர்மபுரி அருகே இண்டூர் தலைமை ஆசிரியை ஆபாச பேச்சு... மாணவிகள் சாலை மறியல்
தர்மபுரி மாவட்டம், இண்டூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாத்தி, மாணவிகளை ஆபாசமாக திட்டி வருவதாகக் கூறி, பள்ளி மாணவிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை இண்டூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த இண்டூர் காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உட்பட கல்வி அலுவலர்கள் நேரில் வந்து சமரசம் செய்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story