நவோதயா அகாடமி மாணவர் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தொடர் வெற்றி

நவோதயா அகாடமி மாணவர் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தொடர் வெற்றி
X
தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கடந்த 14ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர் அதில் நமது நவோதயா அகாடமி பள்ளி மாணவர் செல்வன் எஸ். மோனிஷ் (ஆறாம் வகுப்பு) கலந்துகொண்டு 400மீட்டர் பிரிவில் முதலிடத்தையும், 1000மீட்டர் பிரிவில் முதலிடத்தையும், பாய்ண்ட் டூ பாய்ண்ட் பிரிவில் முதலிடத்தையும் என தொடர் வெற்றிகளைப் பெற்று காண்போர் அனைவரையும் வியக்க வைத்து வெற்றிகளைக் குவித்தார். வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் பொருளாளர் கா தேனருவி அவர்கள் சான்றிதழ், மற்றும் மெடல் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஸ்கேட்டிங் போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்ற மாணவர் கல்வியிலும் தொடர் முயற்சி செய்து நன்றாக படித்து பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் புகழ் சேர்க்கும் அளவிற்கு கல்வியில் கவனமும், ஆர்வமும் செலுத்தவேண்டும் என்று வாழ்த்தினார்” பள்ளி முதல்வர், இருபால் ஆசிரியப் பெருமக்கள், சக மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
Next Story