அரசு பள்ளிக்கு சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை

நரிப்பள்ளியில் அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டும் பணிக்கு அரூர் எம்எல்ஏ பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிப்பள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலமாக ரூபாய் 64 லட்சம் மதிப்பீட்டிலான சுற்றுசுவர் கட்டும் பணிக்கு இன்று சனிக்கிழமை பூமி பூஜை செய்து அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பெற்றோர் சங்க தலைவர் முருகன், நரிப்பள்ளி விஜி,சிக்ளூர் கிளை செயலாளர் இளையராஜா சதாசிவம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story