உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோர்

தர்மபுரி உழவர் சந்தையில் 35 டன் காய்கறிகள் விற்பனை
புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதை அடுத்து சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து படையல் இடுவதால் காய்கறிகள் விற்பனை ஜோராக நடைபெறும். இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 20, புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு உழவர் சந்தையில் 35 டன் காய்கறிகள், 3 டன் பழங்கள் விற்பனையானது இவற்றின் மொத்த மதிப்பு 11,67, 288 ரூபாய்க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
Next Story