புரட்டாசி மகாளய அமாவாசை தினம் மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம்.!

X
Namakkal King 24x7 |21 Sept 2025 5:37 PM ISTமோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.
முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான முக்கியமான நாள் அமாவாசை ஆகும்.அதிலும் மகாளய அமாவாசையன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த பலனை பெற்று தரும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் தர்ப்பணம் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைப்பதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிடைத்து குடும்பம் தழைத்தோங்கும், குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலம் (15 நாட்கள்) பித்ருக்களுக்கு உரிய காலமாகும். இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வந்து அவர்களின் சந்ததியினர் செய்யும் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். எனவே,மற்ற அமாவாசை நாட்களை விட மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர்- 21) அன்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர். இதற்காக சிவாச்சாரியார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை,பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று தர்ப்பணம் செய்த பொருட்களை இலையுடன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். இதில் நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி,சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் காவிரி ஆற்று படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றிலும் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
Next Story
