தனியார் வேன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துவற்கு நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினருடன் வாகன உரிமையாளர்கள் சந்திப்பு.

தனியார் வேன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துவற்கு நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி பாராளுமன்ற உறுப்பினருடன் வாகன உரிமையாளர்கள் சந்திப்பு.
X
நாமக்கல் மோகனூர் சாலையில் தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மோகனூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறுத்தி வந்தனர்.
தற்பொழுது அப்பள்ளி அருகே வாகனங்கள் நிறுத்துவதால் சிரமம் ஏற்படுவதாகவும் போக்குவரத்திற்கு இடையூறு உள்ளதாகவும் தெரிவித்து மோகனூர் சாலையில் வாகனங்கள் நிறுத்து காவல்துறை தடை விதித்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் நிறுத்த அனுமதி அல்லது நிரந்தர இடம் ஒதுக்கி தரக்கோரி சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு VS.மாதேஸ்வரன் MP அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் வாகன உரிமையாளர்களை கோரிக்கையை எடுத்துரைத்து அவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் ஒரு சில தினங்களில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story