வார சந்தையில் நாட்டுக்கோழி விற்பனை மந்தம்
நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிறு & செவ்வாய்க்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமான வார சந்தை நடக்கிறது. நேற்று செப்.21 ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்தையில் விவசாயிகள் நாட்டுக் கோழிகளை விற்க & வாங்க வந்திருந்தனர். நாட்டுக்கோழிகள் ரூ.380 - ரூ.1400 வரை என 2.50 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாகவும் புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை மந்தமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story




