கோவை சிங்காநல்லூரில் அதிமுக எம்.எல்.ஏ ஜெயராம் ஆவேச பேச்சு – திமுக, மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு

X
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கழக அம்மாபேரவை இணை செயலாளருமான கே.ஆர். ஜெயராம், பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசி திமுகவையும், மாநகராட்சியையும் கடுமையாக விமர்சித்தார். 2026ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைவது உறுதி என வலியுறுத்திய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நலத்திட்டங்களை நினைவூட்டியதுடன், திமுக குடும்ப ஆட்சியாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் திமுகவினர் பொதுமக்கள் நலன்களைத் தடுக்கும் வகையில் விளையாட்டு மைதானம், மேடை, நியாயவிலை கடை போன்ற திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுத்துவருவதாக கூறினார். கோவை மாநகராட்சி 8வது இடத்திலிருந்து 500வது இடத்துக்கு வீழ்ந்துள்ளதாகவும், குப்பை, துர்நாற்றம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், 570 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கும் பணிகளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்யவுள்ளதாக எச்சரித்தார். ஸ்டாலின் அரசை “நான்கரை ஆண்டுகள் எதுவும் செய்யாத அரசு” என விமர்சித்த ஜெயராம், வீட்டு வரி, மின்கட்டண உயர்வை சாடியதுடன், ஜெயலலிதா ஆட்சியில் இலவச மின்சாரம், மின்மிகை மாநிலம் ஆகிய சாதனைகளை பெருமையுடன் நினைவூட்டினார்.
Next Story

