கற்றாழை வெட்டி கடத்திய தந்தை மகனுக்கு அபராதம்

X
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்துார் அடுத்த மணியம்பாடி கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், அவரது மகன் சிவலிங்கம், ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் கற்றாழைகளை வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர். இன்று திங்கட்கிழமை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது
Next Story

