தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்களுக்கான ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்களுக்கான  ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
X
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தொழிலாளர்களுக்கான ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பதிவு பெற்ற 1800 கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் கொத்தனார், தச்சுவேலை, வர்ணம் பூசுதல், கம்பி வளைப்பு வேலை பிளம்பர், மின் பணியாளர், வெல்டர், கருமான் கொல்லன், ஏ.சி. மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் ஆகிய தொழில்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முதல் தொடர்ந்து 7 நாட்கள் நாமக்கல் வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) மற்றும் கொல்லிமலை வட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) ஆகியவற்றில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,800 நலவாரிய தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சி வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும். இப்பயிற்சியில் கலந்துக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800/- ஊதியம், மதிய உணவு மற்றும் பயிற்சியில் கலந்துக்கொண்டதற்கான பயிற்சி சான்றிதழும் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்தவர்கள், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருப்பவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பதிவு பெற்ற 1,800 கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை தொடங்கி வைத்து, விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையார் (ச.பா.தி) இந்தியா, நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.ஈஸ்வரன், பயிற்சியாளர் சங்கர் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story