நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

X
Namakkal King 24x7 |22 Sept 2025 9:30 PM ISTகல்லூரி மாணவ, மாணவியர்கள் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் “உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் மு.ராஜேஸ்வரி தலைமை வகித்து மாணவ மாணவியர் மன அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என பேசினார்.சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட மனநல மருத்துவர் இந்துமதி (மாவட்ட மனநல திட்டம்) கலந்துகொண்டு"தற்கொலை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றி அதைப் பற்றி பேசத் தொடங்குவோம்" என்ற தலைப்பில் பேசினார். மன அழுத்தம், சோர்வு, ஏமாற்றம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் இடம் பெறக்கூடாது என்பதையும், ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன், உணர்ச்சிப் பூர்வமாக, தன்னம்பிக்கையுடன் செயல்படுவதை பற்றி பேசினார்.மேலும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களை எவ்வாறு அடையாளம் காணலாம், அவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்டெடுக்க எப்படி உதவலாம் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை விரிவாகப் பரப்புவதற்காக மாணவ மாணவியர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகள்-போஸ்டர் உருவாக்குதல், கவிதை மற்றும் குறுங்கதை எழுதுதல், வீடியோ தயாரித்தல் ஆகிய படைப்புகளின் மூலம் மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.முன்னதாக மாணவ, மாணவியர்கள் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் மற்றும் நாமக்கல் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
