கடைநிலை ஊழியர்களிடம் பல கோடி மோசடி

நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் விசாரணை செய்ய கோரிக்கை
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி.பாஸ்கரன், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை செயலாளர், உணவு துறை அமைச்சர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மேலாண் இயக்குநர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் நிர்வாக இயக்குனர், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அலுவலகத்தில், பட்டியல் எழத்தர், உதவியாளர், காவலர் (வாட்ச்மேன் ) ஆகிய மூன்று பருவ காலங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களிடம் பல ஆண்டு காலமாக பல கோடி ருபாய் ரெரக்கவரி வசூல் செய்து உள்ளார் கள். ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு ஆணை விதிமுறைகள் என்று தெளிவாக எதுவும் இல்லை. ஆனால், ரொக்கவரி மட்டும் வசூல் செய்து உள்ளார்கள். இதனால் பல குடும்பங்கள் தங்கள் தாலியை அடகு வைத்து கத்து வட்டிக்கு வாங்கி பணம் கட்டுகிறோம் என்று பாதிக்கப்பட்ட குடும்ப தாய்மார்கள் கூறினார்கள். இது தொடர்பாக, சென்னை அலுவலகம் இரண்டிலும் தொலை பேசி யில் தொடர்பு கொண்டு கேட்ட போது அரசு ஆணை விதிமுறைகள் எதுவும் இல்லை என்றும், சுற்றிக்கை கடிதம் உள்ளது என்று கூறி உள்ளார்கள். சுற்றிக்கை கடிதம் எண் ந க எண் எம் பி 1/31400/2025 நாள் 17/06/2025 கடிதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, கொள்முதல் செய்த நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் எடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு எடுக்கும் போது அதில் எடை குறைவு இருந்தால் மட்டுமே பட்டியல் எழத்தர், உதவியாளர், காவலர் ஆகிய 3 நபர்களிடம் ரொக்கவரி வசூல் செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறி உள்ளார்கள். ஆனால், 48 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து செல்லும் போது அதில் எடை குறைவு ஏற்பட்டால் அதற்கு உரிய ரொக்கவரி, மண்டல அலுவலர் எஸ்ஆர்எம், துணை மேலாளர் எஸ்ஆர்எம் அலுவலகம் இவர்கள் தான் கட்ட வேண்டும் என்று தெளிவாக கூறி உள்ளார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, 10 நாள் மற்றும் 1 மாதம் கழித்து தான் எடுத்து செல்கிறார்கள். அதுவரை நெல் மூட்டைகள் வெயில், மழையில் தான் இருக்கிறது. இதில் எடை குறைவு ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு என்று தெளிவாக கூறி உள்ளார்கள். இதற்கு ரொக்கவரி மேற்படி அதிகாரிகள் கட்ட வேண்டும். ஆனால், இவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பட்டியல் எழத்தர், உதவியாளர், காவலர் ஆகிய 3 நபர்களிடம் ரொக்கவரி என்று ஒவ்வொரு நபரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து உள்ளார் கள். இவர்கள் 3 மாதம் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு ரொக்கவரி வசூல் செய்து உள்ளார்கள். இது முறைபடி கட்ட வேண்டியது அதிகாரிகள் தான். ஆனால் அவர்கள் கட்ட வில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இவ்வாறு பல ஆண்டு காலமாக வசூல் செய்த பணம் எங்கே, யார் கணக்கில் உள்ளது என்று கேட்டால் அதற்கு எந்த விதமான பதிலும் இல்லை. ஆவணங்கள் இல்லை. மாறாக, உண்மைகளை மூடி மறைத்து நாங்கள் பட்டியல் எழத்தர், உதவியாளர், காவலர் யாரிடமும் ரொக்கவரி வசூல் செய்ய வில்லை என்று பொய்யான தகவல் தந்து உள்ளார்கள். இது தொடர்பாக, நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அப்போது கூட நாங்கள் அரசு ஆணை படி தான் ரொக்கவரி வசூல் செய்து வருகிறோம் என்று கூறினார் கள். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் வசூல் செய்ய வில்லை என்று பொய்யான தகவல்களை தந்து உள்ளார் கள். நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், ரொக்க வரி உடனடியாக கட்ட வேண்டும் என்று பட்டியல் அனுப்பி உள்ளார் கள். அனைவருக்கும் கட்டியவர் போக இன்னும் நீங்கள் கட்ட வில்லை உடனடியாக கட்ட வேண்டும் என்று பட்டியல் அனுப்பி உள்ளார்கள். இதனால் மிகுந்த சந்தேகம் எழுகிறது. வசூல் செய்த பணம் எங்கே, வசூல் செய்த பணம் எங்கே, யாரிடம் உள்ளது. ரொக்க வரி என்று வசூல் செய்த பணத்தை மோசடி செய்து உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு சாட்சி அவர்கள் கடிதமே ஆகும். இல்லை என்றால் பணம் எங்கே? எந்த வங்கியில் உள்ளது என்று வெளியிட வேண்டும். ரொக்க வரியை அதிகாரிகள் தான் கட்ட வேண்டும். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து கடை நிலை ஊழியர்களை மிரட்டி ரொக்க வரியை வசூல் செய்த பணத்தை அவர்கள் இடம் உடனடியாக திரும்ப தர வேண்டும். இத்தனை ஆண்டு காலமாக வசூல் செய்த பணம் தொடர்பாக உரிய முறையில் நேர்மையான முறையில் விசாரணை செய்து சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான தகவல்களை தந்து உள்ள அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பட்டியல் எழத்தர், உதவியாளர், காவலர் ஆகிய அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story