முருக்கம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி, காரிமங்கலம் ஒன்றியம் முருக்கம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று செவ்வாய்க்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் சதீஷ் முகாமை பார்வையிட்டார். உடன் பிடிஓ சர்வோத்தமன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், தொகுதி பார்வையாளர் அரியப்பன், தாசில்தார் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 560 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் பயனாளிகள் அனைவருக்கும் திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன் மதிய உணவு வழங்கினார்.
Next Story





