பிரதமர் மோடி பிறந்தநாள்: பாலப்பட்டியில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய பாஜகவினர்!

X
Namakkal King 24x7 |23 Sept 2025 7:42 PM ISTபாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 இருந்து அக்டோபர் 2 தேதி வரை சேவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதனை அடுத்து பாலப்பட்டி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை தந்த அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
மோகனூரில் பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாள் விழாவை பா.ஜ.க வினர் கொண்டாடினர். பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் வழங்கப்பட்டது.நாமக்கல், பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 இருந்து அக்டோபர் 2 தேதி வரை சேவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதனை அடுத்து பாலப்பட்டி அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகை தந்த அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் வழங்கப்பட்டது. மோகனூர் மேற்கு ஒன்றிய தலைவர் ரேவதி தர்மலிங்கம் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பி.சி.வடிவேல் , முன்னாள் பொது செயளர் ஆனந்த் , முன்னாள் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சுபாஷ், தங்கவேல் , துணைத் தலைவர்கள் குப்புசாமி, வக்கீல் சரவணன், சிவகுமார், பெரியசாமி, கிளைத்தலைவர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இதில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
Next Story
