நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நவராத்திரி கொலு வைத்து சிறப்புபூஜை நடத்தப்பட்டது.

X
NAMAKKAL KING 24X7 B |23 Sept 2025 8:38 PM ISTநவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அம்பிகை என்ற பெண் தெய்வத்தின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான கொலு வைத்தல் என்பது வீடுகளிலும், கோவில்களிலும், புனிதமான இடங்களிலும் கொலு வைக்கும் முறை உருவானது. அதனைப் போற்றும் வகையில் அம்பிகை தெய்வத்தை ஒன்பது நாட்கள் இரவு, பகலாக வழிபட்டால் விவசாயம், ஆரோக்கியம், செல்வம், கல்வி, ஞானம் பெருகும் என்ற நம்பிக்கையில் கொலு வைத்துக்கொண்டாடுகின்றோம். அந்த வகையில் நவோதயா கல்விக்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பது படிகளில் 500க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கொண்டு பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டது. ஆகம முறைப்படி கொலுவின் நடுவில் கும்பம் வைக்கப்பட்டு, கீழே முதல்படியில் வினாயகர் முதல் ஒர் அறிவு உயிர், மரம், செடிகள் என்றும் மனிதவாழ்விற்கு உறுதுணையான அனைத்து விலங்குகள். தெய்வங்கள், பண்பாடு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகள் என அனைத்தையும் முறையாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள், வழிபாட்டிற்கு தேவையான பிரசாதம,; பழங்கள், பூக்கள், நெய்வேத்தியம் என அனைத்து பூஜை பொருள்களையும் எடுத்து வந்து உலக நன்மைக்காகவும், கல்வி செல்வம் பெருகுவதற்கும் பாடல்கள் பாடியும், பூஜை நடத்தி வருகின்றனர். முதல்நாள் பூஜையில் கும்பத்தை ஏற்றி வைத்து பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும், பொருளாளர் கா தேனருவி அவர்களும் வழிபாடு செய்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள், அனைவரும் கலந்துகொண்டனர்.
Next Story
