டயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி பாராளுமன்ற உறுப்பினருடன் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை.

X
NAMAKKAL KING 24X7 B |23 Sept 2025 9:09 PM ISTடயர் ரீட்ரேடிங் தொழிலுக்கு 18% GST வரி நடைமுறையில் உள்ளது. GST வரியினை நீக்க நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், வரி குறைப்புக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்நிகழ்வில் டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் வரதராஜ், மாநிலத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மல்லீஸ்வரன், துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், லோகேந்திரன் இணைச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
