கோவை மாணவி தற்கொலை முயற்சி – விளையாட்டு பயிற்சி மறுப்பில் புகார் !

X
கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி, தனது மகள் மோனிக்காவிற்கு நேரு ஸ்டேடியத்தில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி வழங்க மறுத்ததால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்க மாத்திரை எடுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மோனிக்கா தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயிற்சிக்கு அனுமதி மறுத்தது குறித்து காயத்ரி, DSO புவனேஸ்வரி, RSM அருணா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பெயரை குற்றம்சாட்டியுள்ளார். சயத் இப்ராஹிம் என்ற பயிற்சியாளர் மற்றும் நேரு ஸ்டேடியம் அதிகாரிகளுக்கு இடையிலான பழைய பிரச்சனைகள், பள்ளி ஆசிரியர்களின் இடையூறு காரணமாகவே தனது மகள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Next Story

