மழைக்காலங்களில் கால்நடை பராமரிப்பு

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி தைக்கால் தெருவில், ரிலையன்ஸ் பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து மழைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமில், கால்நடை மருத்துவர் கோபிநாத் ஆடியோ கான்பெரன்ஸ் மூலமாக கலந்து கொண்டு, மழை காலத்தில் கால்நடை பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, கன்று பராமரிப்பு, அம்மை நோய் தடுப்பு முறைகள். மழை காலத்தில் ஏற்படும் நோய் மற்றும் தடுப்பு முறைகள், பால் உற்பத்தியை அதிகரிக்க செய்தல், குடற்புழு நீக்கம் செய்வதின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கினார். முகாமில். 30-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

