திருப்பூண்டி- தலைஞாயிறு சாலையில் கோரிக்கை வலியுறுத்தி

X
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பிடாகை தெற்கு ஊராட்சியில் உள்ள சடையன்கோட்டகத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2016–2017 ஆண்டுகளில் முழுமை பெறாத 40-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூண்டி– தலைஞாயிறு சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ரேசன் கடைக்கு சொந்தமாக கட்டிடம், அடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. போராட்டத்திற்கு, கிளை செயலாளர் அழகு தலைமை வகித்தார். போராட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உமாநாத், வினோத், ராமலிங்கம், கிளை நிர்வாகிகள் கார்ல்மார்க்ஸ், சிவராமன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள், துணை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், திருப்பூண்டி- தலைஞாயிறு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

