நாமக்கல் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழா!
Namakkal King 24x7 |26 Sept 2025 11:07 PM ISTகன்யா பூஜை மற்றும் சுமங்கலி பூஜையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, உள்ளிட்ட மங்கலப் பொருட்களும், கன்யா பூஜையில் கலந்து கொண்ட சிறுமிகளுக்கு பட்டு பாவாடை , நோட் புக், எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல் - கடைவீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில் நவராத்திரியை முன்னிட்டு ஐந்தாவது நாள் நிகழ்வாக கொலு மண்டபத்தில் வெள்ளி சப்பரத்தில் வாசவி அம்மன் ஸ்ரீ ஆண்டாள் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும் கன்யா பூஜை மற்றும் சுமங்கலி பூஜையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, உள்ளிட்ட மங்கலப் பொருட்களும், கன்யா பூஜையில் கலந்து கொண்ட சிறுமிகளுக்கு பட்டு பாவாடை,நோட் புக், எழுதுப்பொருட்கள்,மற்றும் சிறுமிகளுக்கு தேவையான பேன்ஸி அலங்கார பொருட்களை கொடுத்து அனைவரும் ஆசீர்வாதம் பெற்று கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி மடத்தின் தலைவர் & மேனேஜிங் டிரஸ்டி தாஸ்(எ) பா.தாசப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story


