தரகம்பட்டி- உடல்நலம் குன்றிய ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

தரகம்பட்டி- உடல்நலம் குன்றிய ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
தரகம்பட்டி- உடல்நலம் குன்றிய ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம் தரகம்பட்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி வயது 44. இவர் அருகில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவரது மனைவி தமிழ்ச்செல்வி வயது 40 இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறு மாத காலமாக ஆசிரியர் தங்கபாண்டி மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கபாண்டியின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரில் பாலவிடுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story