திருக்குறள் சொல்லும் தமிழ்நாடு வெல்லும் திருக்குறள் திருப்பணித்திட்டம் ஆறாவது வாரம் பயிற்சி வகுப்பு.
NAMAKKAL KING 24X7 B |27 Sept 2025 9:35 PM ISTதமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தமிழ் கழகத்தின் மூலமாக இராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இனிதே துவங்கியது.
பயிற்சிக்கு எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பேராசிரியர் விஜயலட்சுமி மகாலிங்கம்பார்வையாளராக கலந்து கொண்டு மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.இராசிபுரத்தின் தமிழ் கழகம் செயலாளர் பள்ளித் துணை ஆய்வாளர் கை பெரியசாமி தலைமை தாங்கினார்.திருக்குறள் உலகை வழி நடத்தக்கூடிய உலகப் பொதுமறைதமிழ் பண்பாடு உலகைக் கழித்த ஆகச்சிறந்த கொடை திருக்குறள் எழுதப்பட்டு 2000 ஆண்டுகள் கடந்தும் திருக்குறளை நாம் நேரடியாக படித்து புரிந்து கொள்ள முடிகிறது என்பதை திருக்குறளின் முதல் வெற்றி ஆறாம் பொருள் இன்பம் என்ற வாழ்வியலின் மூன்று முக்கியமான களங்களில் சக மனிதர்களோடு உரையாடும் திருக்குறள் ஒரு மந்திரமோ தந்திரமோ அல்ல அது ஒரு சுதந்திரம் என்றார். இராசிபுரம்தமிழ் கழகத்தின் தலைவர் பி தட்சிணாமூர்த்தி முதன்மை கருத்தாளராக திருக்குறளின் மேன்மை குறித்தும் இன்றைய நாள் அதிகாரம் தீவினையெச்சம் புறங்கூறாமைகுறித்து கதைகள் வாயிலாகவும்செயல்பாட்டின் வாயிலாகவும் அறிமுகம் செய்தார் மனோஜ் குமார் தன் கற்பித்தல் பணியை இணைந்து செய்தார்இராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் ரீகன் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். இராசிபுரத்தி தமிழ்க் கழகம் இணை செயலாளர் இருசப்பன்.தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகரன் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story



