பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர் தகவல்!

பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர்  தகவல்!
X
பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
தூத்துக்குடி மாநகராட்சியில், பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாநகராட்சி மைய அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வகித்தார். அப்போது அவர் அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புபணிகளையும் நாம் முறைப்படுத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Next Story