கோவையில் ஆதரவற்றோர் இல்லம் மூடல் !

கோவையில் ஆதரவற்றோர் இல்லம் மூடல் !
X
கோவையில் குழந்தை தாக்குதல் சர்ச்சை: ஆதரவற்றோர் இல்ல அங்கீகாரம் ரத்து, உரிமையாளர் கைது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் “கிரேசி ஹேப்பி ஹோம்ஸ்” ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவனை பெல்டால் தாக்கியதாக இல்ல உரிமையாளர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். குழந்தைகள் நல அதிகாரிகள் ஆய்வில் போதுமான வசதிகள் இல்லையென கண்டறிந்து, அரசு அங்கீகாரம் ரத்து செய்து இல்லத்தை மூட பரிந்துரைத்தனர். அங்கு இருந்த 9 சிறுவர்களில் 4 பேர் அன்னூருக்கும், 3 பேர் மேட்டுப்பாளையத்துக்கும், 2 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story