சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட‌ மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவோடு கண்ணகி விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, திருச்செங்கோட்டில் கண்ணகியின் வரலாறு மற்றும் சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக, சிலப்பதிகார அரங்கம் அமைத்திட, தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிலப்பதிகார அரங்கம் அமைத்திட ஏதுவாக இடத்திற்கான இசைவாணை திருச்செங்கோடு நகராட்சி மூலம் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்செங்கோட்டில் சிலப்பதிகார அரங்கம் அமைக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு நகராட்சி நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித்குமார் ஜெயின், திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் எ.அருள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story