மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
NAMAKKAL KING 24X7 B |29 Sept 2025 6:44 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 435 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அண்ணா மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.70,500/- மதிப்பில் பரிசு தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருமாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750/- மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினையும் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.பிரபாகரன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் எஸ்.கோகிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


