நாமக்கல் தெற்கு நகர திமுக பொறியாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்!

X
Namakkal King 24x7 |30 Sept 2025 8:59 PM ISTபுதிதாக நியமிக்கப்பட்ட நாமக்கல் தெற்கு நகர பொறியாளர் அணி பொறுப்பாளர்களுக்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்து வரும் திமுகவில் இளைஞர் அணி, மகளிரணி, மாணவர் அணி, ஐடி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்ப அணி, மீனவரணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, ஆதிதிராவிடர் நலக் குழு உள்பட 25 அணிகள் செயல்பட்டு வருகிறது.நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் இராஜேஸ்குமார் எம்.பி பரிந்துரையின் பேரில் நாமக்கல் தெற்கு நகர பொறியாளர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் திமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டது. இவர்கள் நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதில் பொறியாளர் அணி அமைப்பாளராக மணிகண்டன் துணை அமைப்பாளர்களாக பிரபு,சுதர்சன், சபீர் அகமது, நிதீஷ் குமார்,சஞ்சய், லோகு ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
